வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:00 IST)

ஆப்பிள் நிறுவனத்தின் ’’I Phone12, ’’ ‘’ I Phone12 pro’’ இந்தியாவில் விற்பனை….அமோக வரவேற்பு

உலக அளவில் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்ட் என்ற சிறப்பினைத் தக்க வைத்து விற்பனை மற்றும் தொழில்நுட்பத்தில்  உச்சத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.

இந்நிலையில், வருடம் தோறும் புதிய அப்டேடுகளை வெளியும் ஆப்பிள் நிறுவனம் தற்போது I Phone12,  I Phone12 pro தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

I Phone12-ன் சிறப்பம்சங்கள்

 64 ஜிபி I Phone12 –ன் விலை  ரூ.79,900 ஆகும், 
128 ஜிபி I Phone12–ன் விலை  ரூ.84,900 ஆகும்.
256ஜிபி I Phone12-ன் –விலை ரூ.1,19,900 ஆகும்.
512 ஜிபி I Phone12-ன் விலை ரூ.1,49,900 ஆகும்

இந்த இரண்டு போன்களிலும் நேனோ மற்றும் இ-சிம்களை ஆகிய டூயல் சிம்  வசதியுள்ளது. இதில் ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமும், இவ்விரு போன்களில் 6.1.இன்ச் super retina XDR OLED திரையுள்ளது.

குறிப்பாக இந்த போன் 5 ஜி தொழில்நுட்பத்தின் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் கேமர 12 மெகாபிக்சல் ஆகவும், ஐபோன் 12 பிரோவில் டிரிப்பில் 12 மெகாஅ பிக்ஸல் ஆகவும் உள்ளது பேட்டரி மற்றவற்றைப் போலிருந்தாலும் சிறப்பாக வயர்லெஸ் வசதியுள்ளது. பேட்டரி திறன் 2,815 ஆகும்.