வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 22 மே 2017 (19:02 IST)

என்னது ஆப்பிள் நிறுவனம் பீட்சா பாக்ஸ் தயாரிக்குதா?

ஆப்பிள் நிறுவனம் தற்போது பீட்சா பாக்ஸ் ஒன்றுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய்யுள்ளது.


 

 
ஆப்பிள் நிறுவனம் டெக் உலகில் சிறந்த ஒன்று. ஐபோன், ஐமேக், ஐபாட் என ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் வரலாற்றில் இடம்பிடித்தவை. இந்நிலையில் ஆப்பிள் தற்போது புதிதாக பீட்சா ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளது.
 
இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனத்துடன் காப்புரிமை பிரச்சனை ஏற்பட்ட பிறகு ஆப்பிள் நிறுவனம் தனது நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் காப்புரிமை பெறுவதில் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.
 
ஆப்பிள் நிறுவனம் மொபைல், கணினி மட்டும் இல்லாமல் ஏராளமான பொருட்களை தயாரித்துள்ளது. ஆனால் அவை அறிமுகம் செய்யப்படவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகத்தில் பயன்படுத்தும் ஏராளமன பொருட்கள் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள். விற்பனை செய்யப்படும் பொருட்களின் பேக்கேஜிங் போன்றவற்றிக்கு முதற்கொண்டும் காப்புரிமை பெற்று வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
 
தற்போது காப்புரிமை பெற்றுள்ள இந்த பீட்சா பாக்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது. ஊழியர்கள் பணியின் போது பீட்சா வாங்கி வந்து சிறிது நேரம் கழித்து உண்ணும்போது பீட்சா அதன் ரூசி மற்றும் தன்மையை இழந்துவிடுகிறது. இதனால் ஊழியர்கள் எவ்வளவு நேரம் கழித்து  சாப்பிட்டாலும் சூடாக, சுவையாக இருப்பதற்காக இந்த பீட்சா பாக்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.