வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Raj Kumar
Last Updated : வியாழன், 23 மே 2024 (18:14 IST)

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

poco f6
சியோமி நிறுவனம் குறைந்த விலையில் மொபைல்களை வெளியிடுவதற்காகவே வைத்திருக்கும் துணை மொபைல் மாடல்தான் போக்கோ சீரிஸ். ரெட் மீ மொபைல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இதன் விலை குறைவாகவும் சிறப்பம்சங்கள் குறைவாகவும் இருப்பதை பார்க்க முடியும்.

 
இன்று வெளியாகியிருக்கும் Xiaomi Poco F6 இன் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
 
Xiaomi Poco F6 அம்சங்கள்:
 
நெட்வொர்க்: வழக்கம் போல இதுவும் 5ஜி சப்போர்ட்டோடு வந்திருக்கும் மொபைல் ஆகும்.
டிஸ்ப்ளே: 1220 x 2172 பிக்சல்ஸ் ஹெச் டி திரையுடன் 6.67 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் 120 ஹெட்ஸ் ரிஃப்ரஸ் ரேட்டிங்கோடு 2400 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது இந்த மொபைல்.
 
பயன்பாட்டு தளம்: யூசர் இண்டர்ஃபேஸை பொறுத்தவரை சியோமி புதிதாக வெளியிட்டுருக்கும் ஹைப்பர் ஓ.எஸ் இண்டர்ஃபேசில் ஆண்டிராய்டு 14 ஓ.எஸ்ஸில் Xiaomi Poco F6 மொபைல் இயங்குகிறது.
 
மெமரி: இந்த மொபைலில் மெமரி கார்டு போடுவதற்கான ஸ்லாட் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் இண்டர்னல் மெமரியில் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் மொபைல் வருகிறது. அதே போல ரேமிலும் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என இரண்டு வேரியண்ட்கள் வருகின்றன.

poco f6

 
கேமிரா: கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் இரண்டு கேமரா உள்ளது. ஒன்று 50 எம்.பியும் மற்றொன்று 8 எம்.பி அல்ட்ரா வொய்ட் கேமிராவாகவும் உள்ளது. முன்பக்கம் 20 எம்.பி செல்ஃபி கேமரா இருப்பது ஒரு அட்வாண்டேஜ் என்றே கூற வேண்டும்.
 
பேட்டரி மற்றும் சார்ஜிங்: தற்சமயம் வரும் மொபைல்கள் எல்லாம் 6000 எம்.ஏ.ஹெச் சில் வரும்போது இது 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரியில் வருவது ஒரு பின்னடைவுதான். ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை 90வாட்ஸ் கொடுக்கிறது இந்த மொபைல்.
 
டிஸ்ப்ளேவிலேயே ஃபிங்கர் ப்ரிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது மக்களை கவரும் வகையில் உள்ளது.
 
கருப்பு, பச்சை மற்றும் டைட்டானியம் நிறங்களில் வெளியாகும் இந்த மொபைலின் விலையை இன்னும் சியோமி நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் 35,000க்கு குறைவாகதான் இதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.