1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 மே 2018 (19:25 IST)

ஜியோ போட்டியாக சலுகை வழங்கும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவானம் ஜியோவுக்கு போட்டியாக புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே மற்ற நிறுவனங்கள் சலுகைகள் வழங்கிவருகின்றன.  
 
ஏர்டெல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கும் ரூ.449 விலையில் கிடைக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 
 
ரூ.449 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 
ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 
மேலும், ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட் ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவித்தது. அதில், ரூ.193க்கு தினமும் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.49க்கு 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.