ஞாயிறு, 16 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 14 மே 2015 (12:16 IST)

ஐ.பி.எல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 
 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்றைய போட்டி மிக பெரிய சவாலாகும். மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். 
அணியில் ரோகித்சர்மா, ராயுடு, போல்லார்ட் என திறமையான வீரர்கள் பலர் இருப்பினும் வெற்றி தோல்வி என சற்று தடுமாறிக்கொண்டிருக்கிறது இவ்வணி.
 
கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். எனவே மும்பை அணியை வீழ்த்தி அடுத்தகட்ட சுற்றுக்கு நுழையும் முனைப்பில் உள்ளது கொல்கத்தா அணி. கொல்கத்தா அணியில் கம்பீர், உத்தப்பா, யூசுப் பதான் போன்ற வீரர்கள் எதிரணிக்கு சவால் விடுக்க காத்திருப்பதால் இன்றைய ஆட்டத்தில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது.