Daily Horoscope

என்னை மன்னித்துவிடுங்கள்: வெளியான கோலி வீடியோ!

Updated: வியாழன், 24 மே 2018 (19:02 IST)
ஐபிஎல் டி20 போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தை அடுத்து தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 
 
நாளை கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி சென்னையும் இறுதி போட்டியில் மோதும். ஆனால், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலே போட்டியில் இருந்து வெளியேறியது. 
 
அணியின் தோல்விக்கு பின் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் கேப்டன் விராட் கோலி தர்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு, 
 
எங்களால் நினைத்த அளவுக்கு 11 வது ஐபிஎல் சீசன் போட்டியில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை. 
 
நாங்கள் விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது, காயப்படுத்தி இருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments