Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

Written By Sasikala
Updated: திங்கள், 17 அக்டோபர் 2016 (12:54 IST)
கேரட் துருவல் - ஒரு கப்
கோஸ் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
புதினா - சிறிதளவு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 250 மில்லி
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மைய்ய அரைக்கவும். மாவுடன் கேரட் துருவல், கோஸ் பொடியாக நறுக்கியது, குடமிளகாய், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்துப் பிசையவும். 
 
பின்னர் வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 
குறிப்பு: 
 
நாம் விரும்பும் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வடை செய்யலாம். இந்த வடைக்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments