Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பிரெட் மஞ்சூரியன் செய்ய...!

Written By Sasikala
Updated: வியாழன், 2 நவம்பர் 2017 (12:50 IST)
வெங்காயத் தாள் - 1 கப்
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - திறிதளவு
சோயா சாஸ் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
சோள மாவு, மைதா மாவுடன் சிறுது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளங்கள். பிரெட் துண்டுகளை சிறிதாக  வெட்டி, மாவில் சூடான எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள்.
 
தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
 
காடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
 
இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த வைத்துள்ள ப்ரெட் துண்டுகளைப் போட்டுக் கலந்து விடவும். கடைசியாக கொத்தமல்லித் தழை, வெங்காயத் தாள் தூவி இறக்கி விடவும். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments