வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. சுதந்திர தின சிறப்பு பக்கம்
  3. பட தொகுப்பு
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (16:41 IST)

இந்திய தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜவகர்லால் நேரு!!

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல்  பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார்.

 
நேரு அவர்கள் 1916-ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கமலா  நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 
அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்பாராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், நவீன இந்தியாவின்  சிற்பி எனவும் அழைக்கப்பட்டவர் ஜவகர்லால் நேரு.

 
பாரத ரத்னா ஜவகர்லால் நேரு முதலாவது இந்திய பிரதமர் ஆவார். விடுதலை போராட்டத்தின் போதும், அதற்குப் பின்னரும்,  இந்திய தேசிய காங்கிரசில் இருந்தவர்களுள் மிதமான சோசலிசவாதிகளின் தலைவராகக் கருதப்பட்டவர்.

 
1947, ஆகஸ்ட் 15-ல் இந்தியா, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது பிரதமராக பதவியேற்றார். 1964, மே 27-ல் காலமாகும் வரை அவரே இப்பதவியை வகித்து வந்தார்.



இவர் பிரபல காங்கிரசுத் தலைவராக இருந்த மோதிலால் நேருவின் மகனாவார். மாபெரும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை  அர்ப்பணித்துக் கொண்டவர் நேரு.