Daily Horoscope
✕

சீதாபழத்தின் மருத்துவ குணங்கள்!

Written By Ravivarma
Updated: சனி, 28 ஜூன் 2014 (15:44 IST)
சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை  அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை‌க் கொண்டது. 
சீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து,  பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையு‌ம் அடங்கியுள்ளது.
 
இ‌வ்வளவு ச‌த்து‌க்க‌ள் ‌சீதாபழ‌த்‌தி‌ல் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது. 
 
மரு‌த்துவ குண‌ங்க‌ள்!
 
சீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.
 
சீதாபழச் சதையோடு உப்பை‌க் கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
 
இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
 

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
 
சீதாபழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
 
சீதாபழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
சீதாபழம் விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. 
 
சிறுவர்களுக்கு சீதாபழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும்.
 
சிறிதளவு வெந்தயம், சிறு பயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீதாபழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும். 
 
சீதாபழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். 
 
ந‌ன்‌றி: பசுமை இ‌ந்‌தியா!

எல்லாம் காட்டு

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

Show comments