வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்...!

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களால்தான் எந்தவித பாதிப்பு இல்லை என்பது உண்மையான விஷயம்.
* சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம். தக்காளியை நன்றாக பிசைந்து  அதனோடு 4 அல்லது 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.
 
மஞ்சள் தூளை பசை போல் செய்து சருமத்தின் மேல் தடவ வேண்டும். உடனடி நிவாரணம் பெற தினமும் தொடர்ந்து இரண்டு முதல் மூன்று முறை செய்ய  வேண்டும்.
 
முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2-3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம்  பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும். சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.
 
சீரகம் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம்  பிரகாசமாக தோன்றும்.
 
பப்பாளி கூழில் உள்ள பயனுள்ள என்ஜைம்கள் சரும ஆரோக்கியத்தை பேணுவதில் வல்லவை. கண்களின் கீழே ஏற்படும் வீக்கத்தையும், கரும்படலத்தையும்  மட்டுமல்லாமல் கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களையும் சரி செய்து தோலில் ஏற்படும் ரத்தப் போக்கை குணமாக்குகிறது. பப்பாளி கூழை கண்களின் கீழே  உள்ள தோலில் தடவி நாம் அற்புத நன்மைகளைப் பெறலாம்.
 
புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
 
அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.