வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:56 IST)

எலுமிச்சை சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் !!

தினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீரைப் பருகி வந்தால் உங்கள் வயிறு, உடல் எல்லாம் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை கொல்ல இது வெகுவாக பயனளிக்கும்.
 
எலுமிச்சைப் பழச்சாற்றைப் குடிப்பதனால் உங்கள் குடல் பாதையில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து பருகினால் செரிமானப் பிரச்சனை குணமாகும்.
 
கண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைப் பழங்களை போட்டு வைத்தால், எலுமிச்சைப் பழம் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
 
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை  தடுக்கிறது.
 
சமையலறைப் பாத்திரங்கள் அல்லது காய்கறி நறுக்கும் பலகைகளை உபயோகப்படுத்தியப் பின்பு எலுமிச்சை சாறுப் பயன்படுத்திக் கழுவி வைத்தால் கிருமிகள்  அண்டாது இருக்கும்.
 
காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை நம்மிடையே அண்டவிடாது துரத்த, அறுத்து வைத்த எலுமிச்சை பழத்தோடு இரண்டு, மூன்றுக் கிராம்பு சேர்த்து வைத்தால் போதும். இது கொசு உங்களை அண்டாது வைத்துக் கொள்ளும்.
 
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது.