புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:47 IST)

ஹீரோவை அடுத்து பாடகராகவும் மாறிய சந்தானம்!

santhanam sing
ஹீரோவை அடுத்து பாடகராகவும் மாறிய சந்தானம்!
காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு படத்தில் அவர் பாடகராக மாறி உள்ள செய்தி வெளியாகியுள்ளது. 
 
பிரசாந்த் ராஜ் என்ற இயக்குநரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கிக்’.  இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கின்றனர். இந்த படத்தில் தான் சந்தானம் ஒரு பாடலை பாடியுள்ளார் 
 
சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு நடந்ததாக தகவல் வெளியாகி வந்தன. இந்த படத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள தன்யா ஹோப் விளம்பர விநியோகிஸ்தர் கேரக்டரில் உள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
இந்த படம் சந்தானம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்த படத்தை பார்த்து சந்தானம் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தனம் பாடிய பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran