லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் நயன் தாரா? விரைவில் அறிவிப்பு!
லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பது இந்த படத்தை மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
முதல்முறையாக ராகவா லாரன்ஸ், நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Siva