வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (14:38 IST)

பகவத் கீதையை படித்துக்கொண்டே பாலியல் உறவு! – சர்ச்சைக்குள்ளான ஓப்பன்ஹெய்மர் காட்சிக்காக நடவடிக்கை!

Oppenheimer
பிரபல ஹாலிவுட் படமான ஒப்பென்ஹெய்மரில் பாலியல் உறவின்போது பகவத்கீதை படிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டோனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஓபென்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி ராபர்ட் ஓப்பென்ஹெய்மர் மற்றும் அமெரிக்காவின் மன்ஹாட்டன் ப்ராஜெக்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் சிலியன் மர்பி, ஃப்ளாரன்ஸ் பக்குடன் உடலுறவு கொள்ளும் காட்சியில் பகவத் கீதை படிப்பது போல காட்டப்பட்டுள்ளது. இந்து மத புனித நூலான பகவத் கீதையை அவதூறாக காட்சி படுத்தியிருப்பதாக பலரும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அந்த காட்சியை உடனடியாக படக்குழு நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த காட்சியை படத்தில் வைக்க அனுமதி வழங்கிய படத்தணிக்கை குழு உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K