திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (12:13 IST)

டாம் க்ரூஸின் மரணம்தான் Mission Impossibleன் முடிவா? - MI: The Final Reckoning ட்ரெய்லர்!

MI The Death Reckoning

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்துள்ள Mission Impossible: The Final Reckoning படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஹாலிவுட் திரைப்பட தொடர்களில் Mission Impossible ஒரு முக்கியமான திரைப்பட வரிசையாகும். பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் இந்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 1996ல் தொடங்கிய மிஷன் இம்பாசிபிள் திரைப்பட வரிசை 28 ஆண்டுகளில் 7 திரைப்படங்களாக வெளியாகியுள்ளது.

 

இந்த வரிசையில் 8வது பாகமான The Final Reckoning அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது. இது முந்தைய பாகமான Mission Impossible: The Death Reckoning-ன் தொடர்ச்சியாகும். முந்தைய பாகத்தில் செயற்கை நுண்ணறிவு வில்லனுடன் ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) மோதிய நிலையில், இந்த பாகத்தில் அதை உருவாக்கிய கும்பலுடன் பெரும் மோதலை எதிர்கொள்ள இருக்கிறார்.
 

 

இந்த மிஷன் இம்பாசிபிள் Mission Impossible: The Final Reckoning படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஈத்தன் ஹண்ட் ‘இதுதான் கடைசி மிஷன்’ என்பது போல பேசுவதாக வசனம் உள்ளது. இதனால் மிஷன் இம்பாசிபிள் பட வரிசையில் இதுவே கடைசி படமாக இருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

 

மேலும் ட்ரெய்லரின் காட்சிகள் ஈத்தன் ஹண்ட்டின் மொத்த மிஷன் பயணத்தையும் காட்டுவது போல அமைந்துள்ளதால் இதில் அவரது மரணம் முடிவாக இருக்குமோ என ரசிகர்களிடையே பேச்சு எழத் தொடங்கியுள்ளது. அல்லது இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸிலிருந்து ஈத்தன் ஹண்ட் ஓய்வு பெறுவதுடன் இது முடியலாம் என்ற கருத்தும் உள்ளது.

 

Edit by Prasanth.K