1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (07:50 IST)

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

jackie chan
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அவர்களுக்கு தற்போது 70 வயதாகும் நிலையில் அவர் இளம் வயது கேரக்டரில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜாக்கி சான் நடிப்பில் உருவாகியிருக்கும் ’ஏ லெஜண்ட்’ என்ற திரைப்படம், 2005 ஆம் ஆண்டு வெளியான ’தி மித்’ மற்றும் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘குங்பு யோகா ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜாக்கி சான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளாராம், அதில் ஒரு வேடத்தில் ஏஐ மூலம் அவர் இளவயது ஜாக்கிசானாக நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவரது ஆரம்ப கால படங்களில் இருந்தபோல பரபரப்பான சண்டைக் காட்சிகள், சாகசக் காட்சிகள், கற்பனைக்கு எட்டாத சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதே சமயத்தில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Edited by Siva