1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:55 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட்: தோல்வி அடைந்தாலும் வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து அணி..!

உலகக் கோப்பை கிரிக்கெட் பேட்டியின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி மிக எளிதாக முதல் போட்டியில் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தாலும் ஒரு வரலாற்று சாதனையை பெற்றுள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அனைத்து வீரர்களும் இரட்டை இலக்கங்களில் ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. 
 
இதுவரை நடைபெற்ற 4658 போட்டிகளில் அனைத்து வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் எடுப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
நேற்றைய போட்டியில்  நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்தின் வில் யங் முதல் பந்திலேயே அவுட் ஆகி இருந்தாலும் டேவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் அருமையான பார்ட்னர்ஷிப் வழங்கினர். 
 
இவர்கள் இருவரின் அபார ஆட்டத்தால் 36வது ஓவரில்நியூசிலாந்து அணி தனக்கு வழங்கப்பட்ட இலக்கான  283 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
 
Edited by Siva