ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (18:48 IST)

திருநள்ளார் பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்..!

சனிபகவான் கோவில் அமைந்துள்ள திருநள்ளார் திருத்தலத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் பொருள் இழப்பு சரியாகும் என்றும் மர்ம நோய்கள் குணமாகும் என்றும் ஐதீகமாக உள்ளது.  
 
திருநள்ளார் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சகல கலைகளையும் சிறந்த ஞானத்தையும் சொல் வன்மையையும் தேர்ச்சியையும் தருபவர் என்றும் சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபடும் வழக்கம் திருநள்ளார் பகுதியில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. 
 
பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நல தீர்த்தத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார். இவரை வணங்கினால் தீராத கடன், பொருள் இழப்பு மற்றும் மர்மமான நோய்கள் உடனே அழிந்துவிடும் என்றும் சாந்தியும் நிம்மதியும் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran