சென்னை அருகேயுள்ள ஞாயிறு திருத்தலம் : அரிய தகவல்கள்..!
சென்னையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஞாயிறு திருத்தலம் குறித்த அரிய தகவல்களை தற்போது பார்ப்போம்.
சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்குன்றம் அருகே ஞாயிறு திருத்தலம் அமைந்துள்ளது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டிய இந்த கோவிலில் பல்லவ மன்னர்கள் சேர அரசர்கள் திருப்பணி செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் ஒன்றாக இந்த சூரிய தலம் கருதப்படுகிறது. இங்குள்ள சூரிய பகவானுக்கு கோதுமை பொங்கல் அல்லது கோதுமை பாயாசம் படைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்றும் கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஊடல்கள் தீரும் என்றும் பிரிந்து போன தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் என்றும் நம்பப்படுகிறது
சித்திரை மாதம் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இந்த கோவிலில் உள்ள ஈசன் மீதும் அம்பிகை மீதும் சூரிய ஒளி விழும் என்பதும் கூறப்படுகிறது.
Edited by Mahendran