1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (19:39 IST)

ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் எத்தனை நாட்கள் திறந்திருக்கும்?

srirangam
வைகுண்ட ஏகாதேசி அன்று அனைத்து பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது என்பதும் அதேபோல் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என்றும் அதன் பிறகு இம்மாதம் 16ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காலை 4 45 மணி முதல் 10 மணி வரையிலும் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஒவ்வொரு நாளும் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்றும் அந்த நேரத்தில் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
மேலும் இந்த சொர்க்கவாசல் திறக்கப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva