1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Tirupathi kothanda ramasamy temple

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பது எப்போது?

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்த அளவுக்கு பிரபலமோ, கிட்டத்தட்ட அதே அளவிற்கு திருப்பதி கோதண்டராமசாமி கோவில் பிரபலம் என்பதால் ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்கள் பலர் அந்த கோவிலுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்றைய தினம் கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஜனவரி இரண்டாம் தேதி அதிகாலை 01.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஆன்மீக பக்தி இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-12-2022)!