திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (20:33 IST)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில்சொர்க்க வாசல் திறப்பது எப்போது?

parthasarathi temple
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பது எப்போது என்ற தகவலையும் சற்றுமுன் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோவிலில் ஒன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் என்றும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு திருமொழி திருநாள் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதன் முக்கிய அம்சமான வைகுண்ட ஏகாதசி திருவிழா ஜனவரி இரண்டாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜனவரி இரண்டாம் தேதி அதிகாலை 2 30 மணி முதல் பத்து முப்பது மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறும் என்றும் அதன்பிறகு 4 மணிக்கு உள்பிரகாரம் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
 
Edited by Mahendran