புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (20:14 IST)

எமன் உயிரையே எடுத்த சிவபெருமான்.. பூமிதேவி கோரிக்கையால் உயிர்த்தெழுந்த வரலாறு..!

எல்லோருடைய உயிரையும் எடுக்கும் எமனின் உயிரையே சிவபெருமான் எடுத்த நிலையில் மக்கள் தொகை அதிகமாகி பூமியின் பாரம் தாங்காமல் பூமி தேவியின் கோரிக்கையை அடுத்து எமதர்மனை சிவபெருமான் உயிர்த்தெழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 
 
மார்க்கண்டேயன் உயிரை பறிக்க எமதர்மன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்திற்கு வந்தபோது மார்க்கண்டேயர் ஓடி சென்று சிவலிங்கத்தை கட்டி பிடித்துக் கொண்டார். அப்போது எமன் வீசிய பாச கயிறு சிவலிங்கத்தின் மீதும் பட்டதும் ஆவேசம் அடைந்த சிவபெருமான் தனது இடது காலால் எமனை ஓங்கி உதைத்தார்.
 
இதனால் எமன் உயிர் பிரிந்தது, எமன் உயிர் பிரிந்ததால் மக்கள் தொகை அதிகரித்து பாரம் தாங்காமல் பூமி தேவி அவதிப்பட்ட நிலையில் தான் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்தார்.
 
இதனை அடுத்து விஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருமானை அணுகி எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்று வேண்டியதை அடுத்து சிவபெருமான் எமன் மீது இரக்கம் கொண்டு அவரை உயிர்ப்பித்தார். இந்த புராண வரலாற்றை சுட்டிக்காட்டும் வகையில் திருக்கடையூர் தலத்தில் எமதர்மராஜாவும் எழுந்தருவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran