செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (18:27 IST)

திருவாசகம் படித்தால் அடுத்த பிறவியிலும் நன்மை கிடைக்கும்..!

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று கூறப்படும் நிலையில் இந்த நூலைப் படிப்பவர்கள் இந்த ஜென்மத்தில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் பலனை பெறுவார்கள் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.  

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் என்பது இந்துக்களின் புனித நூலாக கருதப்படுகிறது. இந்த நூலை தினமும் படித்து வந்தால் இந்த பிறவி மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  

 இந்த நூலில் உள்ள சில பாடல்கள் மாணவர்களுக்கு பாடநூலாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படிக்க படிக்க மனதை உருக வைக்கும் அளவுக்கு அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் இறைவனே நேரில் வந்து நமக்கு இந்த பாடலை பாட சொல்லிக் கொடுப்பது போன்று இருக்கும் என்றும் இந்த புத்தகத்தைப் படித்தவர்கள் கூறுவது உண்டு  

எனவே  தினந்தோறும் காலை மாலை என இரு வேளைகளிலும் திருவாசகம் நூலை படித்து இந்த பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Edited by Mahendran