ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2024 (18:55 IST)

ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?

Ayyappan Bhakthargal
கார்த்திகை மாதம் பிறந்ததும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகிறார்கள். தினமும் ஐயப்பன் பாடல்களை பாடி, ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள் என்பதையும் நாம் காணலாம்.

இந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலும் கருப்பு உடை அணிவது வழக்கமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.

சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளதால், காட்டு யானைகள் அதிகமாக நடமாடும். அவை வெள்ளை நிறத்தை கண்டால் சினம் கொண்டு பிளிரும்; ஆனால் கருப்பு நிறத்தை கண்டால் வெகுண்டு எழாது. அதனால் தான் ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடை அணிவது வழக்கம் உள்ளது. கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. கருப்பு உடை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்தால், ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு இருக்காது என்பது ஐதீகமாக கூறப்படுகிறது. ஏனெனில், சனீஸ்வரன், ஐயப்பனின் அனுக்கிரகம் பெற்றவர் என்று ஐதீகம்.

யாரெல்லாம் கருப்பு நிற உடை அணிந்து, சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார்களோ, அவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படாது என்று சனி பகவானே கூறியதாக ஐதீகங்கள் உள்ளன.


Edited by Mahendran