செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (20:09 IST)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: நாளை ஆனி ஊஞ்சல் திருவிழா..!

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை ஆனி ஊஞ்சல் திருவிழா நடைபெறுவதை அடுத்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர் 
 
ஆனி மாதம் 9 நாட்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவம் நாளை முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த காலங்களில் பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த பூஜைகளை ஏற்றுக் கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள் பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. 
 
ஆனி ஊஞ்சல் திருவிழா திருவிழாவை அடுத்து சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran