1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (18:40 IST)

கள்ளழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம்: குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

கள்ளழகர் கோவிலில் ஆடி தேரோட்ட விழா நடைபெற்றதை அடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தை காண குவிந்துள்ளனர்.  
 
கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 
 
இன்று காலை ஆறு முப்பது மணிக்கு பெருமாள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். எட்டு மணிக்கு தொடங்கிய தேரோட்டம் பக்தர்களின் கோவிந்தா கோபாலா கோஷத்துடன் நான்கு ரத வீதிகளிலும் அசைந்து ஆடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கள்ளழகர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர் என்பதும் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran