செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2025 (18:26 IST)

திருச்செந்தூரில் மாசிப்பெருவிழா. கொடியேற்றம் தேதி அறிவிப்பு..!

Tiruchendur
திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு மாசி பெருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுவாமி திருக்கோயிலில் மாசி பெருவிழா மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும், மாசி பெருவிழாவின் பத்தாவது நாளான மார்ச் 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாசி 11ஆம் நாள், மார்ச் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். அன்றைய தினம் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வருவார் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
மாசி பெருவிழாவுக்கு திருச்செந்தூருக்கு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran