வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (13:28 IST)

ஸ்ரீ காலபைரவரை வழிபாடு செய்யும்போது சொல்லவேண்டிய கவசம் !!

Theipirai Ashtami
தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கி ணைந்து கிடைக்கும். பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாள் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட் டால் புண்ணியமும், பலனும் அதிகமாக கிடைக்கும்.


சிவனது வடிவாய் உதித்தவன் நீயே ஜகத்தையாளும் பைரவர் நீயே
உனதருளாலே உலகம் உய்யும் உதவிடும் நீயோர் உன்னத தெய்வம்
மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி திதியில் உனக்கு சிறப்புடன் பூஜை
வேண்டும் வரங்களைத் தருபவன் நீயே வேதனை நீக்கும் பைரவர் நீயே
கல்விக்கடவுள் தக்ஷிணாமூர்த்தி கழிநடம் புரியும் அம்பலவாணன்
காவல் தெய்வம் நீயே என்று கைதொழுதோமே உன்னை இன்று
அச்சம் போக்கும் அதிபதி நீயே ஆணவமழிக்க நீ உதித்தாயே
நிச்சயம் உன்னைப் பணிந்தவர்க்கெல்லாம் நினைத்தது நடக்கும் நேர்வழி பிறக்கும்
எதிரிகள் தம்மை பதறிட வைக்கும் ஈசனும் நீயே எமக்கருள்வாயே
கதியென உன்னை சரணடைந்தோரை காத்திட வேண்டும் வைரவநாதா
அருள்மிகு சிவனின் ஆலயம் தோறும் வடகிழக்கு மூலையில் சன்னதி உனக்கு
திருவருள் வேண்டி வருபவர்க்கெல்லாம் கருணை செய்வாய் என்பது வழக்கு
நீலநிறத்தில் மேனியைக்கொண்டு நிர்மலனாக நீயிருப்பாயே
முக்கண்ணுடைய செஞ்சடையோனே முன்வினையாவும் தீர்த்து வைப்போனே
காதில் குண்டலம் தலைகள் மாலையும் கடகம் சூலம் உடுக்கை கபாலம்
எல்லாம் தாங்கி எங்களைக் காக்கும் ஈசன் வடிவே எங்கள் துணையே
அன்றொருநாளில் பிரம்மன் தனது படைப்புத் தொழிலில் ஆணவம் கொண்டான்
சிவனைவிடவும் பெரியவன் நானே என்றே முழங்கி அறிவிழந்தானே
கர்வம் கொண்ட பிரம்மனை அடக்க கயிலைநாதன் முடிவெடுத்தானே
நெற்றிப்புருவம் நடுவினிலிருந்து பைரவர் உன்னை உதிக்க செய்தானே
பரமன் சொன்ன ஆணைப்படியே பிரம்மன் அருகில் சென்றாய் நீயே
தலைகள் ஐந்தை தாங்கிய அவனின் ஒருதலை கீழே நீயெறிந்தாயே
அகந்தை நெஞ்சில் மிகுந்தவர்க்கெல்லாம் அதுஒரு பாடம் இது நிஜமாகும்
தவறுகள் செய்வது யாரென்றாலும் தண்டனைத் தருவது உன்பணியாகும்
நல்லவர்க்கெல்லாம் காவலன் நீயே நம்பிடுவோர்க்கு நாயகன் நீயே
வல்லவமையான பைரவர் நீயே வணங்கிடுவோமே பக்தியினாலே
செல்வம் வாழ்வில் குவிந்திட செய்யும் சிவனது உருவே ஜகம் புகழ் திருவே
அல்லன நீக்கி நல்லனக் கூட்டும் கால பைரவா சூலதாரியே
உச்சந்தலையை உன்னருள் காக்க உதடுகள் இரண்டை நீயே காக்க
கண்கள் இரண்டை கனிவாய் காக்க செவிகள் தம்மை சிறப்பாய் காக்க
கன்னம் இரண்டை கருத்தாய் காக்க கழுத்தும் தோளும் நீயே காக்க
எண்ணம் புரளும் இதயம் காக்க என்றும் எங்களை நீயே காக்க
இருகைகால்களை இதமாய் காக்க பாதமிரண்டை பதமாய் காக்க
நரம்புடன் சதையை நயமாய் காக்க நாடினோம் உன்னை என்றும் காக்க
அணுவினுக்கணுவாய் இருப்பவன் நீயே அகிலம் தன்னை காப்பவன் நீயே
மனிதனைக் காக்கும் மகத்துவன் நீயே மலரடிப்பணிந்தோம் மகிழ்ந்தே காக்க
உறுப்புகள் தோறும் உன்னருள் இருக்க ஒருபிணிகூட அணுகிட வருமோ
பொறுப்புடன் நீயும் எங்களை காக்க போற்றிடுவோமே உன்திருவடியே
ஆலயம் தன்னை உன்னருளாலே காவல் செய்யும் கடவுளும் நீயே
ஆதலினால் க்ஷத்திரபாலகரென்றொரு பெயரை நீ பெற்றாயே
பைரவமூர்த்தி பற்பல உண்டு கால பைரவர் அதிலே ஒன்று
காசியில் என்றும் நீயே முதன்மை கவலைகள் தீர்ப்பாய் இதுவே உண்மை
காசிக்கயிறை கையில் அணிந்தால் கஷ்டங்கள் தீரும் நன்மைகள் சேரும்
ஈசன் வடிவே எங்களை காக்க இதயம் கனிவாய் எமக்கருள் புரிவாய்
சூரியன் மகனாம் சனீஸ்வரன் தன் அண்ணன் எமதர்மராஜன் போக்கால்
அலட்சியமாகி கௌரவம் குறைந்து கவலை அடைந்தான் கலங்கிடலானான்
அன்னை சாயாதேவி உடனே உன்னை வணங்கிட அறிவுரை சொன்னாய்
உன்னருளாலே கிரஹங்களில் ஒன்றாய் பதவியும் பெற்று உயர்ந்திடலானான்
அதனால் உன்னை சனீஸ்வர பகவான் உருவாய்க் கொண்டு திருவடி பணிந்தான்
உள்ளம் உருகி உன்னடி வணங்க ஊழ்வினையகலும் உயர்வுகள் சேரும்
திருஷ்டி தோஷம் வைத்து அகலும் பில்லி சூனியம் அச்சம் விலகும்
அமாவாசை நாளில் பூஜைகள் செய்ய ஆயிரம் ஆயிரம் நன்மைகள் கூடும்
குழந்தைப்பேறு இல்லாதவர்க்கும் கொடுப்பாய் நீயே திருவருள் தானே
செந்நிற அரளி மலர்களினாலே அர்ச்சனை செய்தால் பலன் தருவாயே
சிறிதளவாக மிளகினை எடுத்து அகலிடை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய இழந்தவையெல்லாம் கைவந்த சேரும்
வழக்குகள் தன்னில் வெற்றியைக் காண அமாவாசைதோறும் அன்னதானமிடனும்
தேங்காய் சாதம் தேனென வைத்து பைரவர் உனக்கு படைத்தால் நன்மை
தொழிலில் லாபம் வழக்கினில் வெற்றி தொடர்ந்தே கிடைக்கும் துன்பத்தை உடைக்கும்
அருவியைப் போலே அருள்தரும் அரசே
திருமணமாகா கன்னியும் காளையும் ஞாயிறுதோறும் உன்னடி பணிவார்
ராகு காலத்தில் ருத்ராபிஷேகம் விபூதி அபிஷேகம் செய்திட வருவர்
நெய்வடை செய்து மாலைத் தொடுத்து உனக்கே சாற்றி உன்பதம் தொழுவார்
சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கல்யாண யோகம் கைமீது பெறுவர்
ஒவ்வொரு சனியும் வில்வத்தினாலே சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால்
கவ்வியத் துன்பம் கலைந்தே போகும் நல்லவையெல்லாம் நடந்திடலாகும்.

Edited by Sasikala