1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By siva
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:33 IST)

கணவன், மனைவி ஒற்றுமைக்கு கௌரி பூஜை!

கணவன், மனைவி ஒற்றுமைக்கு கௌரி பூஜை
கணவன் மனைவியை ஒற்றுமையை நீடிக்க பயன்படும் கௌரி பூஜை செய்ய இன்று மிகச்சிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது
 
தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறைவு பிரிவு கணவன் மனைவியின் உடல் ஆரோக்கியம் பாதித்தல் ஆகியவற்றுக்கு கௌரி பூஜை விரதம் இருந்து பூஜிப்பது மிகவும் அவசியமாகும் 
 
இந்த தினத்தில் இல்லத்தை சுத்தம் செய்து பூஜை அறையை சுத்தம் செய்து பூஜைக்குத் தேவையானவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்
 
கெளரி பூஜை செய்து முடித்தவுடன் சுமங்கலிகளுக்கு உணவு அளித்து தாம்பூலம் பழம் ஆகியவற்றை அளித்து சிறப்பிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்