புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2022 (18:27 IST)

ஒன்பது என்ற எண் இவ்வளவு மகத்துவங்களை கொண்டுள்ளதா...?

Worship
ஒன்பது எனும் எண் இன்னும் பல மகத்துவங்களை கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.


நவ சக்திகள்:
வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி போன்றவை நவசக்திகள் ஆகும்.

நவ தீர்த்தங்கள்:
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி ஆகியவை நவதீர்த்தங்கள் ஆகும்.

நவ வீரர்கள்:
வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன்,  வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் ஆகியோர் நவவீரர்கள் ஆவர்.

நவ அபிஷேகங்கள்:
மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி ஆகியன நவஅபிஷேகங்கள் ஆகும்.

நவரத்தினங்கள்:
கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம் ஆகியவை நவரத்தினங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவை நவகிரகங்கள் ஆகும்.

நவக்கிரக தலங்கள்:
சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் ஆகியவை நவகிரக தளங்கள் ஆகும்.

நவ ரசம்:
இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவ திரவியங்கள்:
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் போன்றவை நவ திரவியங்கள் ஆகும்.

நவ உலோகம்:
பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம் ஆகியன நவ உலோகம் ஆகும்.