வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (14:49 IST)

நரசிம்மருக்கு முறைப்படி விரதம் இருந்து வழிப்படுவதால் உண்டாகும் பலன்கள் !!

Lord Narasimha
திருமாலின் அவதாரங்களுள் ஒன்று நரசிம்ம அவதாரம். திருமாலின் அவதாரங்களில் மிகவும் கோபத்தின் வடிவமாகத் திகழ்பவை நரசிம்ம அவதாரம் மற்றும் பரசுராம அவதாரம்.


கோபத்தின் வெளிப்பாடு என்பதால்தான் இந்த இரு அவதாரங்களும் மிக அதிக அளவில் வணங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

எல்லா பொருட்களுக்கு உள்ளேயும் நான் இருக்கிறேன் என்று உணர்த்தும் வகையில் பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்காக பக்தர்கள் பலரும் நரசிம்மர் மீது அதீத அன்பு வைத்து வழிபடுவது அதிகரித்து வருகிறது.

நரசிம்மரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெற்றி கொள்ளும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபட்டு வருபவர்களுக்கு எட்டுத் திசைகளிலும் வெற்றி, புகழ் கிடைக்கும். எதிரிகள் தொல்லை மட்டுமல்ல உடலில் ஏற்படும் உடல் நலக் குறைபாடு, கடன் தொல்லை போன்றவற்றையும் போக்கும் வரம் அருள்பவராக நரசிம்மர் உள்ளார்.

நரசிம்மர் மூல மந்திரம்:

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும், ஜ்வலந்தம்
சர்வதோ முகம் நரசிம்மம், பீஷணாம்
பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம் !!

செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் காலையில் குளித்து நரசிம்மருக்குத் தாமரைப்பூவைச் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். அதனுடன் பானகம் படைத்து, மூல மந்திரத்தைச் சொல்லி வழிபாடு நடத்தி கடைசியில் தீபாராதனை செய்து வழிபட வேண்டும். நரசிம்மருக்கு முறைப்படி விரதம் இருந்து வந்தால் சகல நன்மைகளையும் பெறலாம்.