திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (19:24 IST)

சித்தர்கள் மலையடிவாரத்தில் ஒரு ஆஞ்சநேயர் கோவில்.. குவியும் பக்தர்கள்..!

anjaneyar
சித்தர்கள் மலையடிவாரத்தில் ஒரு ஆஞ்சநேயர் கோவில்.. குவியும் பக்தர்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர் 
 
இந்த அனுமனை வழிபட்டால் பக்தர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் மன கஷ்டம் அகலும் என்றும் இந்த கோவிலுக்கு வருபவர்களின் நம்பிக்கையாக உள்ளது 
 
அணைப்பட்டி ஆஞ்சநேயர் என்று கூறப்படும் இந்த ஆஞ்சநேயர் கோவில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
அனுமன் ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இந்த கோவிலில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்றும் அது மட்டும் இன்றி ஒவ்வொரு அமாவாசை, சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran