வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பொலிவு பெற வேண்டுமா...?

சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு பளீச்சிங் தான் சரியான வழி. அதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே ப்ளீச்சிங் செய்து  கொள்ளலாம்.
இவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் சுலபமாக முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்து காணப்படும்.
 
உருளைக்கிழங்கை பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது  ஆரோக்கியமான தோலை தருகிறது.
 
காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர அதாவது மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து  குளிர்ந்த நீரில் கழுவவும்.
 
முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்கவேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள  இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமத்திற்கு தேவையான  புரோட்டீன்கள் கிடைக்கும்.