வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முடி உதிர்வதை தடுத்து அடர்த்தியான கூந்தலை பெற சில டிப்ஸ் !!

முடி உதிர்வைத் தடுக்க, நன்கு முடி வளர எளிய செய்முறைகள் சில உள்ளன. அவற்றை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது.

சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் அடர்த்தி இல்லாமல் இருக்கும். அவர்கள் போதிய நேரம் ஒதுக்கி மயிர்க்கால்களை தூண்டும்படி பராமரித்தால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். கூந்தல் அடர்த்தியாகவும் வளரும்.
 
எண்ணெய் கூந்தல் : தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால், கூந்தல் பலமிழக்கும். அடிக்கடி முடி உதிர்தல் ஏற்படும். ஆகவே அவர்களுக்கு ஏற்ற குறிப்பு இது .
 
தேவையானவை : முட்டையின் வெள்ளைக் கரு - 2, ஆலிவ் எண்ணெய் - 1 கப், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன். செய்முறை : வெள்ளைகருவை தனியாக எடுத்து அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் அடர்த்தி பெறும்.
 
வறண்ட கூந்தல் : வறண்ட கூந்தல் பொலிவாக இருக்காது. பொடுகு, அரிப்பு உண்டாகும் ,இவற்றால் வேகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதற்கான குறிப்பு இங்கே.
 
தேவையானவை : முட்டை - 2 ,ஆலிவ் எண்ணெய் - கால் கப், விளக்கெண்ணெய் - கால் கப், தேங்காய் எண்ணெய் - அரை கப், தேன் - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை:  கூந்தலுக்கு தகுந்த வாறு மேலே சொன்ன விகிதத்தில் குறைவாகவோ, அதிகமாகவோ பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் முட்டை இரண்டை மஞ்சள் கருவுடன் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதில் மற்ற பொருட்களை சேர்க்கவும். இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து நுனிவரை தடவி 1 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தரமான ஷாம்பு பயன்படுத்தி குளிக்கவும். வாரம் இரு முறை இப்படி செய்தால் அற்புத பலன்களைத் தரும். 
 
ஆயில் மசாஜ் செய்துகொள்வதாலும், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதாலும் உடலும் மனமும் தளர்வடையும் (ரிலாக்ஸ் ஆகும்). மசாஜ் தெரபி மற்றும் ரிலாக்ஸ் தெரபி ஆகிய இரண்டையும் தொடர்ந்து செய்து வந்தால் மூன்று மாதங்களில் முடி உதிர்வது நின்று, ஆரோக்கியமாக முடி வளர ஆரம்பிக்கும்.