1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (21:34 IST)

மருதாணி சிவப்பாக சில எளிய வழிமுறைகள் !!

மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் மருதாணி, தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமின்றி புறங்கையிலும், மூட்டு வரை அழகிய ஓவியம் போல் மருதாணி இடப்பட்டு வருகிறது.

நல்ல ஓவியத்திறன், கற்பனைத் திறன் உள்ளவர்கள் மூலம் மருதாணி வைத்துக்கொண்டால் அது காண்போரை கவரும் விதத்தில் அமையும். மருதாணி நன்கு சிவப்பு நிறமாக தோன்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 
 
யூகலிப்டஸ் தைலம் சிறிதளவை கையில் தடவி, பின்னர் மருதாணி இட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.
 
மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து, மருதாணி இட்ட கைகளை லேசாக சூடுபடுத்துவது, கிராம்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் ஆவிபிடிப்பது போன்றவை அடர்த்தியான நிறம் கிடைக்கச் செய்யும்.
 
சர்க்கரை, எலுமிச்சை கலந்த தண்ணீரில் கையை நனைப்பதும் நல்ல பலன்  கிடைக்க வழிவகுக்கும்.
 
மருதாணி இட்டபின் குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் பெற காரணமாக இருக்கும்.
 
மருதாணி காய்ந்தபின் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் இருப்பது நல்லது. இது மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கச் செய்யும். சோப்பு, எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தும்போது மருதாணியின் நிறம் மங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.