ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (15:04 IST)

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை தவிர்க்க வேண்டுமா...?

Pregnancy - Beauty Tips
பெண்களுக்கு தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும் அழகு சாதனப் பொருட்களின் மீதும் அதிக பிரியம் உண்டு. அதே சமயத்தில் அதிக அளவு அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதும், பயன்படுத்தக் கூடாத நேரங்களில் பயன்படுத்துவதும் நமக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.


அழகு சாதனப் பொருட்களில் 60 சதவீதத்திற்கும் மேல் நேரடியாக சருமத்தினால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்க செய்கிறது. அதில் வேதிப்பொருட்கள் கலந்து இருக்கும் பட்சத்தில் அந்த வேதிப்பொருட்களும் நம்முடைய ரத்தத்தில் கலந்து அதன் தன்மைக்கேற்ப உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

லிப்ஸ்டிக், ஹேர் ஸ்பிரே, நெயில் பாலிஷ், போன்றவற்றில் உள்ள ப்தாலேட்ஸ் எனப்படும் கெமிக்கல் கர்ப்ப கால ஹார்மோன்களில் குறுக்கிட கூடியதாகும். ஆய்வுகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் கெமிக்கல் காரணமாக பிள்ளைகளின் IQ அளவு ஆறு புள்ளிகளுக்கு மேல் குறைவதாக சொல்கிறது.

கர்ப்ப காலத்தின் போதோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ குழந்தைக்கு பாலூட்டும் போது அல்லது உடலில் அல்லது ரத்தத்தில் கலந்துள்ள வேறு ஏதேனும் பொருட்களும், குழந்தையும் பாதிக்கக்கூடும்.

துரதிர்ஷ்டவசமாக சந்தையில் கிடைக்கும் 95% சரும பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அனைத்திலும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரே ஒரு வேதிப்பொருளாவது கலந்துள்ளது. இதனால்  சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வேதிப்பொருட்கள் மட்டுமின்றி சில எண்ணெய்களையும் மிக அதிக அளவு சருமத்தில் பயன்படுத்தும் போது, அவையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே ஒரு பொருளை பயன்படுத்தும் போது அதனை பரிசோதித்து, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்று உறுதியான பின்னரே பயன்படுத்த வேண்டும்.

Edited by Sasikala