Daily Horoscope
✕

தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரவேண்டுமா...?

Written By Sasikala
Updated: சனி, 15 மே 2021 (09:57 IST)

தேங்காய் எண்ணெய்யில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணெய்யை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.
 
ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெய்யை நன்கு தடவுவதன் மூலம்  நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.
 
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக  குறைகிறது.
 
தேங்காய் எண்ணெய் கூந்தலின் உச்சந்தலையில் வறட்சியை நீக்குகிறது. இந்த பிரச்சனை மறைந்துவிடும், உங்கள் தலைமுடியை தேங்காய் எண்ணெய்யுடன் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மசாஜ் செய்யுங்கள்.
 
தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.
 
வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments