புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: சனி, 21 மே 2022 (12:35 IST)

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் சரும பலன்கள் என்ன என்பதை பார்ப்போம் !!

Green Tea with Tulsi
இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க,  தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம். வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.


கிரீன் டீயில் உள்ள உட்பொருட்கள், எடை குறைப்பு செயல்முறைகளை ஊக்குவிக்கின்றன. கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன.

கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன.  இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

சருமத்திற்கும் ஏராளமான பலன்களைத் தரும் ஒரு சூப்பர்ஃபுட்டாக கிரீன் டீ இருக்கிறது. யுவி கதிர்களால் பாதிக்கப்பட்ட டிஎன்ஏ சிதைவால் உருவான முடியையும் சருமத்தையும் சரிசெய்ய உதவும்.

பருக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆரோக்கியமான, மிருதுவான சருமத்தைப் பெறவும் கிரீன் டீ உதவும். முடி கொட்டுவதைத் தடுக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, அதனால் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

கேட்ச்சின்களும் மற்றும் பாலிஃபீனால்களும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கின்றன. கிரீன் டீயின் அழற்சி தடுப்பு திறன்கள், உலர்ந்த சருமம் மற்றும் எரிச்சலை சரிசெய்து, தலை முடி உதிர்வையும் சரிசெய்கின்றன. மொத்தத்தில் சரும பாதுகாப்பு நிவாரணியாகும்.