1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

குளிர் காலத்தில் பயன்தரும் சில அழகு குறிப்புகள் !!

குளிர் காலத்தில் முதலில் சருமம்தான் வறட்சியாகும். அவற்றை கட்டுபடுத்த நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில்  உடலில் உள்ள சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்ய, சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவது முக்கியம். 

ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது உங்கள் தோலின் ஈரப்பதத்தைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது. மேலும் நீர் காய்கறிகள் மற்றும்  பழங்களை சாப்பிடுவது நல்லது.
 
குளிர் காலத்தில் பாதாம் மற்றும் நெய் அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் சருமம் பொழிவடையும். Flaxseeds என்ற ஆளி விதைகளை உண்பது உடலுக்கும் சருமத்துக்கும் நல்லது.
 
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் ‘மலச்சிக்கல்’ நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. பொதுவாகவே வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வைத் தடுக்கும்,  முதிர்ச்சியான தோற்றம் வராது. குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் வரும் சிறு சிறு குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கும்.
 
குளிர் காலத்தில் உதடுகள் வறட்சியடைந்து உலர்ந்து தோற்றமளிக்கும். உதடுகளில் வெடிப்புகள் உண்டாகும். இதைத் தடுக்க நெய் மற்றும் ஆலிவ் ஆயிலை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையடையும்.
 
வீட்டில் எளிமையாகக் கிடைக்ககூடிய தயிர் அல்லது பால் கொண்டு சருமத்தை ஈரபதமாக வைத்திருக்கலாம்.
 
குளிர் காலத்தில் தலை குளித்தால் முடியை நன்றாக உலர வைக்க வேண்டும். முடியை உலர வைக்க டிரையர் உள்ளிட்டவைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் மசாஜ் செய்வது நல்லது. ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம்.