Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களை கொண்டு ஸ்கரப் செய்து முகத்தை பளபளக்க செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 6 நவம்பர் 2020 (13:20 IST)

ஆரஞ்சு ஸ்கரப்: பாதி ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய்  எண்ணெய் கலந்து ஸ்கரப் தயாரிக்கவும். வாரத்தில் 3 நாட்கள், இதை வைத்து ஸ்கரப் செய்யலாம்.
 
மாம்பழ ஸ்கரப்: ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ ப்யூரி, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, ½ டீஸ்பூன் பால் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை  நன்றாக கழுவிய பிறகு, ஈரத்தைத் துடைத்த பின் இதை முகத்தில் பூசி, தேய்க்கவும். கழுத்து, உதடு, கை, கால்களில் கூட ஸ்கரப் செய்யலாம். குளிப்பதற்கு முன்,  உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம்.
 
ஆரஞ்சு தோல் மாஸ்க்: 2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர், 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி இவற்றை பேஸ்டாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து  கழுவி விடவும்.
 
இயற்கை ஸ்கரப்: பாசி பயறை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எடுத்து முகத்தில் ஸ்கரப் செய்யுங்கள். உலர்ந்த சருமம் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை செய்யலாம். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாரத்தில் 3 முறை செய்யலாம்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments