முகப்பொலிவுக்கு உருளைக்கிழங்கு எப்படி உதவுகிறது....?
உருளைக்கிழங்கு சாறு தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கு துண்டுகளை டார்க் ஸ்பாட்களில் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு சாற்றை ஸ்பாட்ஸ் மற்றும் டேன்ட் பகுதிகளில் தடவினால் அவை மறைந்துவிடும். உருளைக்கிழங்கு முகத்திற்கு பொலிவைத் தருவதோடு வயதாகும் அறிகுறிகளைக் குறைக்கும்.
உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் கலந்து, பஞ்சால் முகத்தில் தடவவும். சுமார் ஐந்து நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை முகத்தில் தடவலாம்.
முல்தானி மிட்டி மற்றும் உருளைக்கிழங்கு சாறு கொண்டு ஒரு கலவையைத் தயாரிக்கவும். இதனை முகத்தில் தடவி, காய்ந்து போகும் வரை அப்படியே விட்டு விடவும். முகத்தில் இந்த கலவை காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உருளைக்கிழங்கு சாற்றை கலந்து முகத்தை நன்கு கழுவுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம். இப்படி செய்வதன் மூலம், முகத்தின் கரும்புள்ளிகள் அகற்றப்பட்டு, முகம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
Edited by Sasikala