Daily Horoscope
✕

சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் முட்டைகோஸ் ஜூஸ் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (10:24 IST)

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில், உடலுக்கு ஊட்டம் தரும் வகையில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வை தெளிவாக தெரியவும், ஊட்டச்சத்துக்கள் சரும வறட்சி, தலைமுடி உதிர்வு, உடல் சூடு, தொற்று நோய்கள்  போன்றவற்றையும் குணப்படுத்த உதவுகின்றன.
 
இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதே ஆகும். முட்டை கோஸ் ஜூஸில் குறைவான கலோரியே உள்ளதால் உடலில் அதிகபடியாக கொழுப்பும் சேராது. இதனை குடிப்பதால்  உள்ளுருப்புகளில்  படிந்திருக்கும் டாக்ஸின்களை அழித்து எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.
 
புற்றுநோயால் பதிக்கபட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஜூஸ் மிகவும் நன்மையை தருகின்றன. இதற்கு காரணம் முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான  ஐசோசியனேட் இருப்பதால் இவை நுரையிரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.
 
சருமத்தில் ஏற்படக்கூடிய பரு, கரும்புள்ளி, பருக்கள் போன்றவைகளே. இத்தகைய சரும பிரச்சனைகளுக்கு முட்டைகோஸ் ஜூஸ் நல்ல பலனை தருகின்றது.
 
முட்டைகோஸ் ஜூஸ் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து இருப்பதால் இவற்றை தொடர்ந்து குடித்து வருவதால் சரும ஆரோக்கியத்தை பராமரித்து சரும பிரச்சனைகளில் இருந்து முழுமையாக தீர்வு பெறலாம்.
 
வயதான தோற்றம் வருவதை தடுத்து, இளமையாக இருக்க பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் என்றும் இளமையுடன் இருக்க முட்டைகோஸ் ஜூஸ் பெரிதும் உதவும்.

எல்லாம் காட்டு

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments