Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை பிரகாசமாக்க முட்டை ஓட்டை பயன்படுத்தி அழகு குறிப்புகள்....!

Updated: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (18:05 IST)
 
ஒரு கப் ஆல்லிள் சிடர் வினிகருடன் சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் ஏற்படும் எரிச்சல் போன்றப் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
 
இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம். முட்டை ஓட்டு பொடியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் சாம்பலை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில்  போட்டு 30 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.
 
முட்டை ஓட்டினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். கழுவிய உடனே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இதனை வாரம் ஒரு முறை செய்து பாருங்கள்.
 
முட்டையின் ஓடு சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து ஆரோக்கியமான மற்றும் மிருதுவான சருமத்தினை பெற உதவுகிறது. முட்டையின் ஓடினை பொடி செய்து அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து முகத்தில் போட  முகம் பளிச்சென்று இருக்கும்.
 
2 டீஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் மற்றும் கடலை மாவு சேர்ந்துக் கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம்.
 
2 முதல் 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் சேர்த்து கலந்து அதை கண்களைச் சுற்றி உள்ள சருமப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் இரவு தூங்கும் முன்பு மறக்காமல் செய்து வாருங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி  வறட்சி அடையாமல் நீண்ட நேரம் இருக்கும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments