சனி, 23 செப்டம்பர் 2023
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தை வெண்மையாக மாற்றும் அழகு குறிப்புகள் !!

1.  தக்காளி, பச்சை பயறு மாவு மாஸ்க்: 2 ஸ்பூன் பச்சை பயறு மாவுடன் 3 ஸ்பூன் தக்காளிச் சாற்றைக் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகமும் மேனியும் பளிச்சிடும்.

2. தேன், பாதாம் மாஸ்க்: சருமத்தை ஒளிரச் செய்வதில் தேனுக்கும் பாதாமிற்கும் மிக முக்கியப் பங்கு உள்ளது. ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதைத் தொடர்ந்து  செய்து வந்தால், சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சருமம் பளபளப்பாக மாறும்.
 
3. எலுமிச்சை தேன் மாஸ்க்: இவை இரண்டுமே நமக்கு எளிதாகக் கிடைப்பவை தான். ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க்காகத் தடவி, 20 நிமிடங்கள் வரை உலர வைத்து, பின் சாதாரண நீரில் கழுவினால், முகம் பளபளப்பாகும். சருமமும் மிருதுவாகும்.
 
4. கொத்தமல்லி தக்காளி மாஸ்க்: 2 ஸ்பூன் தக்காளிச் சாற்றுடன் 2 ஸ்பூன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் அவற்றுடன் எலுமிச்சைச் சாற்றையும் சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சருமத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவினால் எண்ணெய் பசை  மறைந்து, சருமம் பளபளக்கும்.