1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஜூலை 2018 (16:54 IST)

ஆண்களை விட பெண்களுக்கே மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்!

உணவு பழக்கவழக்கம், வேலைச்சுமை, மன அழுத்தம் என மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஆய்வுகள் கூறுகின்றன. 

 
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஸ்பான்டேனியஸ் கரோனரி ஆர்ட்டெரி டிசெக்சன் என்பது இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வரும் ஒரு அவசர நிலையாகும். இதனால் இரத்த ஓட்டம் குறைவாகவோ அல்லது முழுவதும் தடுக்கப்படுவதால் உடனடி மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இதுபோன்று ஏற்படுவது அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. 
 
இதய நிபுணர்கள் இந்த மன அழுத்தத்தை தூண்டப்பட்ட கார்டியோமயோபதி என அழைக்கிறார்கள். இது ஆண்களைக் காட்டிலும் பெண்களை எளிதாக தாக்கக்கூடியது. 
 
இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் எளிதில் உணர்ச்சிவசபடக் கூடியவர்கள். அதிக எடை கொண்ட பெண்களுக்கு, குறிப்பாக வயிற்றுப்பகுதியில் அதிக கொழுப்பைக் கொண்டிருப்பது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
இதயத்தை பாதுகாக்க உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். இந்த மன அழுத்தம் உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடிய வாய்ப்புகளை இருமடங்காக்கிவிடும்.