செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (00:42 IST)

பைல்ஸ் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு

அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். 
 
இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும்.
 
இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான்.
அறிகுறிகள்:
 
* மலம் இறுகி எளிதில் வெளியேறாது.
* அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு. மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
* மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்.
* மூல சதை வெளித்தள்ளுதல்.
* உண்ட உணவு செரிமானமின்மை.
* புளித்த ஏப்பம்.
 
 
மூலநோய் காரணம்:
 
* கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிக அளவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூல பாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது.
 
* எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்.
 
* சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால் கர்ப்பக் கால மூலநோயானது பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். சில பெண்களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.
 
* மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
 
* மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச்சிக்கல்தான்.
 
* உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும்.
தீர்வுகள்:
 
1. முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.
 
2. மாதுளை தோல் இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.
 
3. இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ் நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.
 
4. அத்திப்பழம் அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.
 
5. வெங்காயம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.
 
6. ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெறுவதற்கு நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். மூல நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சையை தொடங்கும் போது, முதலில் வலியுறுத்துவதே நார்ச்சத்து அடங்கியுள்ள உணவுகளை உட்கொள்வது தான். இதில் முழு தானியங்கள், நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும்.