செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (19:17 IST)

சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடக்கூடாதா?

இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரபலமான உணவு என்பதும் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
ஆனால் அதே நேரத்தில் இட்லியில்  கலோரிகள் அதிகமாக இருப்பதாகவும் மாவு சத்து அதிகமாக இருப்பதாகவும் சர்க்கரை நோயாளிகள் அதிக இட்லிகளை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் ரவா இட்லி, ராகி இட்லி போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் இட்லிக்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி தக்காளி சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கும்.
 
Edited by Mahendran