சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம் வருவது ஏன்?
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தங்களுக்கு மயக்கம் வருகிறது என்று கூறுவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் அவர்களுக்கு அடிக்கடி ஏன் மயக்கம் வருகிறது என்பதை பார்ப்போம்
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் என்பதால் அதன் மூலம் அவர்களுக்கு நீர் சத்து குறைகிறது. இதனால் தலை சுற்றல் மயக்கம் ஏற்படலாம்.
அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது, ரத்த அழுத்தம் இதய துடிப்பு ஆகியவை காரணமாகவும் மயக்கம் வர அதிக வாய்ப்புள்ளது.
எனவே சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தலை சுற்றல் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Edited by Mahendran